21 Aug 2019

செம்பருத்தியின் நன்மைகள் | Benefits of Sembaruthi

செம்பருத்தி செடியின் மருத்துவ குணங்களை நாம் அறிவோம், செம்பருத்தி செடியில் இருக்கும் பூவை எடுத்து அதனை நமது தோழர்கள் கொடுத்து உண்பதும் பள்ளிகளின் தோட்டங்களில் இருக்கும் செம்பருத்தி செடியில் இருக்கும் செம்பருத்தி பூவை பறித்து நண்பர்களுடன் சாப்பிட்ட காலமும் உண்டு. உடலுக்கு நல்ல விதமான பயன்களை அளிக்கும் செம்பருத்தி மருத்துவகுணங்கள் பற்றி காண்போம்.

" செம்பருத்தி பூவை காயவைத்து பொடியாக அரைத்து பாலில் கலந்து காலை மற்றும் மாலை வேலையில் பருகி வந்தால், இதயமானது பலம் பெரும் "


இதில் இருக்கும் குளிர்ச்சித்தன்மை மற்றும் இனிப்பு சுவையின் காரணமாக உடலின் வெப்பத்தை கட்டுக்குள் வைத்து, மலத்தை இளக்கி, உடலின் வறட்சியை அகற்றி, உடலின் உள்ளுறுப்புகளில் இருக்கும் காயத்தை ஆற்றுகிறது. மேலும், காமத்தை அதிகரிக்கிறது. இதுமட்டுமல்லாது மாதவிடாயை தூண்டுகிறது.
செம்பருத்தி பூவின் மூலமாக நரைமுடி பிரச்சனை மற்றும் முடியின் வளர்ச்சி ஆகியவை வெகுவாக அதிகரிக்கிறது. மாதவிடாய் பிரச்சனை உள்ள பெண்கள் செம்பருத்தி பூவை சாப்பிட்டு வந்தால், தாமதமாக ஏற்படும் மாதவிடாய்யானது சரியான நேரத்தில் ஏற்படும்.

செம்பருத்தி, செம்பருத்தி பூ, செம்பருத்தி மலர், sembaruthi, flower, red flower,

செம்பருத்தி பூவை அடாதோசை தளிர் இலைகளுடன் சேர்த்து வடிகட்டி குடித்து வந்தால் இருமலானது நீங்கும். தலையில் இருக்கும் பேன்களை நீக்குவதற்கு செம்பருத்தி பூக்களை தேய்த்து குளித்து குளித்து வந்தால்., பேன்கள் தலையில் இருந்து வெளியேறி பேன் தொல்லை குறையும்.

செம்பருத்தி பூவை காயவைத்து பொடியாக அரைத்து பாலில் கலந்து காலை மற்றும் மாலை வேலையில் பருகி வந்தால்., இதயமானது பலம் பெரும். உடலின் இரும்பு சத்தானது அதிகரித்து, இரத்த சோகை பிரச்சனை நீங்கும்.

நன்றி - Benefits of Sembaruthi


No comments:

Post a Comment