26 Aug 2019

கர்ப்பிணிகள் அதிகம் எடுத்து கொள்ள வேண்டிய உணவு.!

food for pregnant women, food for pregnant, pregnant, how to pregnant, food for children, food for baby


உளுத்தங் களியையும், பனைவெல்லத்தையும் சாப்பிட்டு, கருப்பையை வலிமையாக வைத்திருந்தனர் நம் முன்னோர். ஆனால் இன்று, உளுத்துப்போன துரித உணவு ரகங்களையும் சத்தில்லா உணவையும் அதிகம் தேர்ந்தெடுப்பதால் வலிமையற்றுக் கிடக்கின்றன பலருடைய கருப்பைகள்.
வலிமையான கருப்பையை உருவாக்க நம் முன்னோர்கள் பின்பற்றிய உணவு மற்றும் வாழ்க்கைமுறைகள் ஏராளம். சிறு வயது முதலே கருப்பையை பலமாக்கும் உணவையும் செயல்பாடுகளையும் மேற்கொண்டால், கருப்பை நிச்சயம் வலுவாக மாறும்.


food for pregnant women, food for pregnant, pregnant, how to pregnant, food for children, food for baby


உளுத்தங் களி, பனை வெல்லம், நல்லெண்ணெய், வாழைப்பழம், கோழி முட்டை போன்றவை பூப்பெய்திய பெண்களுக்குப் பாரம்பரியமாக வழங்கப்படும் உணவாக இருந்தன. `இடுப்புக்கடு பலமாம்’ என்கின்ற சித்தர் பாடல், உளுந்தால் செய்த உணவுகள் பெண்களின் இடுப்புக்கு வலிமை கொடுக்கும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

அளவாக உண்டால் உடலுக்கு வலிமையையும் அழகையும் உளுந்து கொடுக்கிறது. உளுந்து சேர்த்து சமைத்த சாதம் பண்டைய தமிழர்களின் திருமண நிகழ்வுகளில் இடம்பெற்றிருப்பதை அகநானூறு படம்பிடித்துக் காட்டுகிறது. விலங்கின மருத்துவத்தில் விலங்குகளின் மகப்பேறு காலத்தில், கருப்பை தசைகளை வலுப்படுத்த உளுந்து வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


food for pregnant women, food for pregnant, pregnant, how to pregnant, food for children, food for baby


உளுத்தங் களியில் நல்லெண்ணெய் கலந்து, “இதைக் கண்டிப்பா சாப்பிடணும், இல்லனா வயிறு வலிச்சிக்கிட்டே இருக்கும்” என்று பூப்பெய்திய இளம் பெண்களை, அக்கால வீட்டு மருத்துவர்கள் பயமுறுத்தி சாப்பிட வைத்துள்ளனர். இதன் காரணமாகத்தானோ என்னவோ அன்று, `சிசேரியன் மகப்பேறு’ என்பது கேள்விப்படாத சொல்லாக இருந்தது.

புரதம், இரும்புச் சத்து, கால்சியம், தயமின், ரிபோஃப்ளாவின், நியாசின் போன்ற வைட்டமின்கள் உளுந்தில் அதிக அளவில் இருக்கின்றன. இனிப்புச் சுவை கொண்ட உளுந்து, மாதவிடாயின்போது உண்டாகும் பித்தத்தைக் குறைத்து உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கக்கூடியது. மாதவிடாய் முடிந்து 6 14 நாட்களில் உளுந்து வகை உணவை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம்.

Source - food for pregnant women

No comments:

Post a Comment