என்ன தான் வீட்டில் கஷ்டப்பட்டு ஊறுகாய் செய்த போதும், கடையில் வாங்கும் ஊறுகாய் போல இல்லையே என்று வருத்தப்படுவோர் அதிகம். அவர்களுக்காக இப்பொழுது பூண்டு ஊறுகாய் எப்படி சுவையாக செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
எலுமிச்சை சாறு - 1/2 கப்
பூண்டு - 1 கப்
மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் - 1/4 கப்
மிளகாய் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை :
பூண்டை நன்றாக தோல் உரித்து சுத்தமாக எடுத்து கொள்ளவும். வெந்தயம், சீரகம், மல்லியை தனித்தனியாக வறுத்து, ஆறிய பின்னர் மிக்சியில் போட்டு நன்கு பொடியாக அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெயை ஊற்றி காய்ந்த பின்னர், பூண்டை எடுத்து போட்டு வாசம் வருமாறு வதக்கவும். பின்னர் அதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
பின்னர் எலுமிச்சை சாறை அதில் ஊற்றி, நன்றாக கெட்டியாகும் வரை கிளற வேண்டும். பின்னர் இறக்கி அதை ஆறவைத்து குளிந்த பின்னர், காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் போட்டு மூடி வைக்க வேண்டும்.
சுவையான பூண்டு ஊறுகாய் ரெடி!! இதனை சாதத்திற்கு அப்படியே துவையலாக பயன்படுத்தலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
Source - Garlic pickle recipe Tamil Online News
No comments:
Post a Comment