10 Sept 2019

சுவைமிக்க ஆப்பிள் அல்வா.!

apple alwa, halwa, apple,

அல்வா என்று கூறினாலே வாயில் இருந்து நீர் உமிழ துவங்கிவிடும். ஏனெனில் அல்வாயை சாப்பிடும் போது அதன் சுவையில் மெய் மறந்து போய் விடுவோம். மாதத்திற்கு ஒரு முறை சுவையான பொருட்களை வீட்டிலேயே செய்து கொடுத்தால் குழந்தைகள் அதிகளவில் விரும்பி உண்ணுவார்கள்.


ஆப்பிள் அல்வா செய்ய தேவையான் பொருட்கள்: 
ஆப்பிள் - 3 பழங்கள்.,
பால் - 1 கிண்ணம்.,
சர்க்கரை - 50 கிராம்.,
நெய் - 4 தே.கரண்டி.,
ஏலக்காய் - 3 எண்ணம்.,
கேசரி பவுடர் - சிறிதளவு.,
பாதாம் மற்றும் முந்திரி - 5 எண்ணங்கள்.

ஆப்பிள் அல்வா செய்யும் முறை:
ஆப்பிளை சுத்தமாக கழுவி அதன் தோலை நீக்கி நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும். வானெலியில் நெய்யை ஊற்றி., நெய் சூடானதும் ஆப்பிள் மற்றும் நெய்யை நன்றாக நீர் இறுகும் வரை கிளறவும்.

apple alwa, halwa, apple,

நீர் இறுகியவுடன் அதில் பாலை ஊற்றி சுமார் 3 நிமிடங்கள் கிளறிய பின்னர்., சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறவும். பின்னர் சுமார் 20 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விட்ட பின்னர் கேசரி பொடி சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் கொதிக்க விட்ட பின்னர் முந்திரி மற்றும் பாதாமை கிளறி இறக்கவும்.

apple alwa, halwa, apple,

இப்போது சூடான சுவையான ஆப்பிள் அல்வா ரெடி.!!

source - Apple Alwa

No comments:

Post a Comment