10 Sept 2019

பெண்களே... அலுவலகத்தில் ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் தெரியுமா?

sex torture in job

இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் ஆண்களோடு இணைந்து வேலை பார்க்கும் சூழல்கள் இருக்கின்றன. ஒரு ஆண்-பெண் நட்புறவு என்பது ஒரு எல்லைக்குட்பட்டு இருக்க வேண்டும். இல்லையென்றால் பெருமளவில் பிரச்சனைகள் ஏற்படும்.

பெண்கள் அவர்களை ஆண்களிடம் இருந்து பாதுகாத்து கொள்ள தற்காப்பு கலைகளை கற்று வைத்துக் கொள்வது சிறந்தது ஆகும். பெண்கள் வேலை செய்யும் இடத்தில் ஆண்களிடம் எவ்வாறு நட்பு வைத்துக் கொள்ள வேண்டும்? அவர்களிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்? என்பதை பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
ஆள் பாதி, ஆடை பாதி என்பதற்கேற்ப நம் உடுத்தும் உடைகள் மற்றவர்களின் உணர்ச்சிகளை தூண்டாமல், நேர்த்தியாக அணிவது நல்லது.

அலுவலகத்தில் உங்களுடன் வேலை செய்தாலும் மொபைல் நம்பர்களை கொடுக்க வேண்டாம். நம்பிக்கைக்குரியவர்களுக்கு மட்டும் மொபைல் நம்பர்களை கொடுக்கலாம்.
உங்களுடைய குடும்ப விஷயங்கள், பர்சனல் விஷயங்களை உங்களுடன் வேலை பார்க்கும் ஆண்களிடம் சொல்லாதீர்கள். ஏனெனில் அங்கேதான் பிரச்சனைகள் உருவாகும்.

நீங்கள் ஆண்களிடம் நட்பு ரீதியாக மட்டும் புன்னகை செய்யுங்கள். காரணமில்லாமல், எல்லாவற்றிக்கும் அவர்களிடம் சிரிக்காதீர்கள். பிறகு கைகுலுக்குதல், தேநீர் அருந்துதல், இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லுதல் போன்றவற்றை செய்யாதீர்கள்.
உங்கள் மனதில் அலுவலகம் என்பது பணிபுரியும் இடம் மட்டுமே என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். குடும்ப பிரச்சனைகளுக்கும், தனிப்பட்ட பிரச்சனைகளுக்கும் ஏற்ற இடம் இது இல்லை என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள்.
பணிபுரியும் இடங்களில் உங்களிடம் யார் பேசினாலும் கண்ணை பார்த்து பேசுங்கள். தேவையில்லாத விஷயங்களுக்கு சத்தமாக சிரிக்காதீர்கள்.

அலுவலகத்தில் பணிபுரியும் ஆண்கள் குறை சொல்லும் அளவிற்கு உடை உடுத்தாதீர்கள். அது போல் தேவையில்லாத விஷயங்களுக்கு வெட்கப்படாதீர்கள்.

எந்தப் பிரச்சனை நடந்தாலும் உடனே அழாதீர்கள். ஏனெனில் சுலபமாக அழும் பெண்களை ஆண்கள் திசை திருப்பி விடுவார்கள்.
ஒரு ஆண் உங்களிடம் எந்த நோக்கத்திற்காக பேசுகிறார்கள் என்பதை அவர்களின் வார்த்தைகளிலும், கண்களிலும் இருந்து பெண்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். அதை வைத்துதான் ஒரு பெண் ஆணிடம் எவ்வளவு தூரம் நட்புறவை வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தெரியும்.

Source - Tamil News Online

No comments:

Post a Comment