26 Aug 2019

சுவையான சிவப்பு அவல் உப்புமா.! செய்வது எப்படி.!

aval payasam, aval food, rice aval, aval upuma,
aval uppuma

அவல் என்றாலே உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இது தான் சரியான தேர்வாகும். அதிலும், சிவப்பு அவல் என்றால் மிகவும் ஸ்பெஷல். அதை வைத்து எப்படி உப்மா செய்யலாம் என பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் :

சிவப்பு அவல் - 1 கப்,
நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு,
வெங்காயம் - 2
காய்ந்தமிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிது,
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்.


தாளிக்க:

கடுகு,
உளுத்தம்பருப்பு,
கடலைப்பருப்பு.


செய்முறை :

அவலை நன்றாக கழுவி ஊறவைக்கவும். பின்னர் தண்ணீரோ வடித்து எடுத்து கொள்ளவும். வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில், எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, போட்டு தாளித்து கடலைப்பருப்பு, கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்னர், வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் அதனுடன் அவலை சேர்த்து கிளறி அதனுடன் உப்பு சேர்க்கவும்.
பின்னர் கொஞ்சம் தண்ணீர் விட்டு கிளறி வாணலியை மூடி வேக வைக்கவும். 5 நிமிடம் வேகவைத்து பின்னர் தேங்காய் துருவல் இட்டு உடனே அடுப்பை அணைத்து விடவும்.
மீண்டும் ஒரு முறை கிளறி விட்டு பரிமாறவும். மணமணக்கும் அவல் உப்மா தயார்.

Courtesy - Tamil News Online 

No comments:

Post a Comment