26 Aug 2019

இனி வீட்டிலேயே ஃபேஷியல் செய்து கொள்ளலாம்..!!

face wash, facial, natural facial, facial at home, facial at myself,





ஃபேஷியல் செய்வதால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும், இறந்த செல்கள் நீங்கும், முகம் தெளிவாகி பளிச்சென மாறும். இதை பார்லர் சென்றால்தான் மாற்ற முடியும் என்பதல்ல. வீட்டில் இருந்தே செய்யலாம். எவ்வாறு என்பதைக் காணலாம்.
முதலில் முகத்தை சுத்தமாக கழுவிக் கொள்ளுங்கள். பருத்தித் துணியால் துடைத்துக்கொள்ளவும்.

அடுத்ததாக ஸ்க்ரப் செய்ய வேண்டும். இதற்கு தேனில் சர்க்கரை கலந்து முகத்தில் தேய்க்க வேண்டும். இதை  10 நிமிடங்கள் செய்வதால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி , சருமத் துகள்கள் விரியும். அழுக்குகள் நீங்கும். பின்னர் முகத்தை தண்ணீரால் கழுவி துடைத்துவிடவும்.
அடுத்ததாக அடுப்பில் தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு அந்த தண்ணீரில் ஆவி பிடிக்க வேண்டும். முகத்தில் நீராவி பட வேண்டும். இதனால் கரும்புள்ளிகள், வெண்மை நீங்கும்.

facial, facial, natural facial, facial at home, facial at myself, face wash, facial wash,

முகத்தை துடைத்து சுத்தம் செய்தபின் ஓட்ஸ் மாவு , தயிர் மற்றும் மஞ்சள் சேர்த்து கலக்கி முகத்தில் மாஸ்க்காக அப்ளை செய்யவும். 15 நிமிடங்கள் ஓய்வு எடுக்க வேண்டும்.
முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இறுதியாக சருமம் ஈரப்பதமாக கற்றாழை ஜெல் அல்லது ஏதேனும் மாய்ஸ்சரைஸர் இருந்தால் தடவவும்.

கற்றாழை ஜெல்லைக் கொண்டு மூன்று நாட்களுக்கு மசாஜ் செய்யுங்கள். முகம் பளிச்சென இருக்கும். முடிந்தால் அவ்வபோது ஏதேனும் மாஸ்க்குகளும் போட்டு வாருங்கள். இதை சரியாக செய்து வந்தால் நீங்கள் பார்லரே போக வேண்டாம்.

Source - facial at home naturally

No comments:

Post a Comment