24 Aug 2019

சத்தான முளைகட்டிய தானிய சாலட்.! செய்வது எப்படி.! 

salad, healthy salad, indian salad, tamilnadu salad, salad preparation, migraine salad.

தேவையான பொருட்கள் :

நிலக்கடலை - 25 கிராம்,
பச்சைப் பயறு - 50 கிராம்,
தக்காளி - 1
மிளகு தூள் - அரை டீஸ்பூன்
வெங்காயம் - 1
எலுமிச்சை பழம் - பாதி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,

செய்முறை :
வேர்க்கடலை மற்றும் பச்சைப் பயறை ஊறவைத்து, குறைந்தது ஒரு நாள் முழுவதும் முளைகட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.
தக்காளி, வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை பொடி, பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் முளைகட்டிய கலவையுடன் தக்காளி, வெங்காயம், கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்றாக கலந்து எடுத்துகொள்ள வேண்டும்.
பின்னர் அதன்மீது பாதி எலுமிச்சை சாறைப் பிழிந்து, அதில் நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித் தழையை தூவி குழந்தைகளுக்குக் கொடுத்து அனுப்பவும்.
சுவையான, சத்தான முளைகட்டிய தானிய சாலட் தயார்.!

Source - how to prepare dhaniya salad 

No comments:

Post a Comment