தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கிண்ணம்.,
வெந்தயக்கீரை - 1 கட்டு.,
தக்காளி - 1 எண்ணம் (Nos).,
வெங்காயம் - 1 எண்ணம் (Nos).,
இஞ்சி - 1 துண்டு.,
பூண்டு - 5 பற்கள்.,
பச்சை மிளகாய் - 3 எண்ணம் (Nos).,
மிளகாய்த் தூள் மற்றும் மஞ்சள் தூள் - தலா அரை தே.கரண்டி.,
சீரகத்தூள், தனியாத்தூள், கரம் மசாலா - தலா 1 தே.கரண்டி.,
தேங்காய்ப்பால் - ஒரு கிண்ணம்.,
எண்ணெய் - 2 மே.கரண்டி.,
உப்பு - தேவைக்கு ஏற்ப...
செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட வெந்தயக்கீரை இலைகளை தனியாக பிரித்தெடுத்து சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். பின்னர் வெங்காயம் மற்றும் தக்காளியை நன்றாக நறுக்கி., இஞ்சி பூண்டு மற்றும் மிளகாயை சேர்த்து நறுக்கி கொள்ளவும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய்யை ஊற்றி பூண்டு., இஞ்சி., பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி., வெங்காயத்தை சேர்த்து வதக்கி எடுக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் தக்காளியை சேர்த்து வதக்கி., கீரையை சேர்த்து பின்னர் மிளகாய் தூள்., மஞ்சள் தூள்., சீரகத்தூள் மற்றும் கரம் மசாலாவை சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும்.
பின்னர் இதனுடன் தேவையான அளவு தேங்காய்ப்பால்., தண்ணீர் மற்றும் உப்பு., அரிசி ஆகியவற்றை சேர்த்து வேக வைத்து., ஒரு விசில் வந்தவுடன் இறக்கவும். சுவையான வெந்தயக்கீரை சாதம் தயார்..
No comments:
Post a Comment