16 Sept 2019

செலரி கீரை சூப்பை குடித்தால் உடனே ஸ்லிம் ஆயிடலாம்.! 

celery soup, soup, soup with celery, soup for weight loss,

தேவையான பொருட்கள் :

சுக்குத்தூள் - அரை டீஸ்பூன்,
செலரி கீரை - 2
பூண்டு - 2 பல்,
சிவப்பு ராஜ்மா - 2 டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் - ஒன்று,
தக்காளி - ஒன்று
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

அடிப்பகுதியை நீக்கிவிட்டு செலரியை அலசி, அதன் தண்டு  மற்றும் இலையை மட்டும் பொடி, பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
தக்காளி மற்றும் பச்சை மிளகாயை பொடி, பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
ஆறு மணி நேரம் ராஜ்மாவை ஊறவைத்து, வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

பின்னர் அதனை மிக்சியில் போட்டு அத்துடன் தக்காளி, பச்சை மிளகாய், முக்கால் கப் செலரி கீரை, பூண்டு, உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு அரைத்து வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
அதை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கவைத்து மீதமுள்ள செலரி இலைகளை அதில் தூவி, சுக்குத்தூள் சேர்த்து இறக்கிப் பரிமாறினால் சுவையான சத்தான செலரி சூப் தயார்.!

Source - Celery Soup Tamil News online

No comments:

Post a Comment