![kalan vada kalan vada,](https://img.seithipunal.com/media/mushroom%20vadai-y2rxl.jpg)
தேவைப்படும் பொருட்கள்:
காளான் - அரை கப்
பன்னீர் - அரை கப்
கொத்தமல்லி, கறிவேப்பில்லை - சிறிதளவு
சோம்பு - ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்
கடலை மாவு - 5 ஸ்பூன்
அரிசி மாவு - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்யும் முறை:
காளானை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். பன்னீரை துருவிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய காளான், துருவிய பன்னீர், கறிவேப்பிலை, கொத்தமல்லி, சோம்பு, மிளகாய் தூள், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து வடை மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சூப்பரான காளான் பன்னீர் வடை ரெடி.
Source - Kaalan Vada Tamil News online
No comments:
Post a Comment