28 Sept 2019

புரட்டாசி ஸ்பெஷல்: குடைமிளகாய் மசால் ரைஸ்.! செய்வது எப்படி.!


udaimilakai, masal rice,

தேவையானப் பொருட்கள்:

குடைமிளகாய் - 2
வெங்காயம் - ஒன்று
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 4 பற்கள்
பச்சைமிளகாய் - 4
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - அரைத் தேக்கரண்டி
கொத்தமல்லி - கால் கோப்பை
உப்பு - தேவைகேற்ப
நெய் அல்லது எண்ணெய் - ஒரு சிறிய கரண்டி

செய்முறை:

கடலைபருப்பு உளுத்தம்பருப்பை கழுவி வைக்கவும். இஞ்சி பூண்டு பச்சைமிளகாயை அரைத்து வைக்கவும்.
இரண்டு கோப்பை  அரிசியை உதிரியாக வடித்து வைக்கவும்.
வெங்காயம் மற்றும் குடைமிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.

வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு சீரகம் போட்டு பொரிந்ததும் கடலைபருப்பு உளுத்தம்பருப்பைப் போட்டு சிவக்க வதக்கவும்.

பின்பு வெங்காயத்தைப் போட்டு சிவந்ததும் அரைத்த விழுதைப் போடவும்.பின்பு அதில் நறுக்கிய குடைமிளகாய் மற்றும் உப்பு பெருங்காயத்தைப் போட்டு வதக்கி வேகவைத்த அரிசியைக் கொட்டி கிளறவும்.

நறுக்கிய கொத்தமல்லி மற்றும் வறுத்த முந்திரி பருப்பால் அலங்கரித்து பரிமாறவும்.குடை மிளகாய் சாதம் தயார். சுவைத்துப் பாருங்கள்.

Source - kudaimilakai special rice Tamil Online News

No comments:

Post a Comment