28 Sept 2019

சத்துக்கள் நிறைந்த முள்ளங்கி கூட்டு.! எப்படி செய்வது.?!

mullangi koottu,


தேவையான பொருட்கள்:

மிளகாய்த்தூள் - தேவையான அளவு,
வெங்காயம் - 1 பெரியது
முள்ளங்கி - கால் கிலோ
கறிவேப்பிலை - 1 கொத்து
தக்காளி - 2
சிறு பருப்பு - 50 கிராம்
மஞ்சள்தூள் - சிறிதளவு
கடுகு, சீரகம் - தாளிக்க
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கழுவிய முள்ளங்கியின் தோலை சுத்தமாக சீவி விட்டு, பின்னர்  அதனை சிறு சிறு துண்டாக வெட்டி கொள்ளவும்.
நன்றாக கழுவிய சிறு பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்து கொள்ளவும்.
தக்காளி மற்றும் வெங்காயத்தை நன்கு பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் ஊறவைத்த பருப்பு, முள்ளங்கி, வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், தனி மிளகாய்த்தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து பின்னர் அதில் கால் கப்பிற்கும் குறைவாக சிறிது தண்ணீர் ஊற்றி கிளறி விட்டு இரண்டு விசில் வரை வேக விட்டு எடுக்கவும்.
கடாயை அடுப்பில் இட்டு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதனுடன் கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து வேகவைத்த முள்ளங்கியை அதில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
சுவையான முள்ளங்கி கூட்டு தயார்.

Source - mullangi kootu preparation Tamil Online News 

No comments:

Post a Comment