23 Sept 2019

தாய்மார்கள் அவசியம் எடுத்து கொள்ள வேண்டிய முருங்கை பொரியல்.!

murungai keerai, poriyal, murungai poriyal, murungai keerai poriyal, murungai keerai recipe, food for pregnant, food for pregnant women, keerai recipe, benefits of keerai,

முருங்கைக் கீரையில் கால்சியம், இரும்பு சத்து உள்ளிட்டவை அதிகமாக இருக்கின்றது. 46 வகையான இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியையும் கொண்டிருக்கிறது. இந்த கீரையை கொண்டு பொரியல் செய்து சாப்பிடுவது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

முருங்கைக் கீரை - 1 கட்டு
கடுகு - ½ டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் - 1 கப்
கல் உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - ½ டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 5 ஸ்பூன்
தேங்காய் துருவல் - ½ கப்.

murungai keerai, poriyal, murungai poriyal, murungai keerai poriyal, murungai keerai recipe, food for pregnant, food for pregnant women, keerai recipe, benefits of keerai,

செய்முறை:

முதலில் முருங்கை கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும். கீரையை மொத்தமாக எடுத்து திருகி லேசாக பொடித்து கொள்ளலாம்.
பின்னர் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், அதில், காய்ந்த மிளகாய், கடுகு, சேர்த்து கடுகு வெடித்தவுடன் வெங்காயம் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் கீரையை அதில் கொட்டி அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி பின்னர் சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். கீரை நன்றாக வெந்ததும் அதனுடன் துருவிய தேங்காயை போட்டு கிளறி இறக்கி சிறிது நேரம் காற்று புகாமல் மூடி வைக்கவும்.
பின்னர் திறந்தால், கமகமக்கும் சத்தான முருங்கைக் கீரை பொரியல் தயார்.!

Source - Murungai poriyal recipe Tamil Online News

No comments:

Post a Comment