23 Sept 2019

சுவையான ப்ரெட் சூப்.! மணக்க மணக்க செய்வது எப்படி.! 

bread soup, german bread soup, bread soup recipe, bread soup bowl,.

தேவையான பொருட்கள் :

தக்காளி - 6,
பிரெட் துண்டுகள் - 4,
வெண்ணெய், சோள மாவு - தலா ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள், நெய் - தலா அரை டீஸ்பூன்,
கோஸ் - சிறிய துண்டு
கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கொத்தமல்லியை பொடி, பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
முட்டைக்கோஸை துருவி எடுத்துக்கொள்ளவும்.
கொதிக்கும் தண்ணீரில் தக்காளியை போட்டு தோல் உரித்து, மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடான பின்னர், நெய் ஊற்றி துருவி கோஸ், மிளகுத்தூள், தக்காளி சாறு, உப்பு சேர்த்து லேசாக சூடாக்கி கொள்ளவும்.

பின்னர் பிரெட்டை பொடித்து அதில் சேர்த்து, அத்துடன் சோள மாவை தண்ணீரில் கரைத்து ஊற்றி கொத்தமல்லி, வெண்ணெய் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான தக்காளி பிரெட் சூப் தயார்.

Source - BREAD SOUP RECIPE IN TAMIL Tamil online News

No comments:

Post a Comment