23 Sept 2019

சுவையான பட்டாணி முட்டை கீமா செய்வது எப்படி..!

pattani egg keema, egg keema, pattani keema,

பட்டாணி, முட்டை சேர்த்து செய்யும் இந்த கீமா சப்பாத்தி, பூரி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

தேவைப்படும் பொருட்கள் :

ப்ரெஷ் பட்டாணி - 1/2 கப்
முட்டை - 4
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு

தாளிக்க தேவையானவை :

எண்ணெய் - 3 ஸ்பூன்
பிரிஞ்சி இலை - 1
பட்டை - 1
கிராம்பு - 2
அன்னாசிப்பூ - 1
பெரிய வெங்காயம் - 1

செய்யும் முறை :

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முட்டையை வேக வைத்து கொள்ளவும். வெந்ததும் தோலுரித்து கேரட் துருவும் துருவியில் துருவிக்கொள்ளவும்.
தக்காளியை மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ போடவும். பட்டை பொன்னிறமானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் ப்ரெஷ் பட்டாணி சேர்த்து கிளறவும்.

பட்டாணி வெந்ததும் அரைத்து வைத்துள்ள தக்காளி கலவையை சேர்த்து பச்சை வாடை போகும் வரை கிளறவும்.
பச்சை வாடை போனதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், மல்லித்தூள் மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

மசாலா வாடை போனதும் அதனுடன் துருவி வைத்திருக்கும் முட்டை துருவல் சேர்க்கவும்.
இறுதியில் கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்.
சாதம், பூரி, சப்பாத்திக்கு சுவையான பட்டாணி முட்டை கீமா ரெடி.

Source - Pattani muttai keema recipe Tamil Online News

No comments:

Post a Comment